குடியுரிமை பதிவுகள்
- தேசிய அடையாள அட்டை விநியோகம்
- பிறப்புச் சான்றிதழ், மரண மற்றும் விவாக சான்றிதழ்கள் விநியோகம்
- காலம் தாழ்த்தி பிறப்பு (03 மாதங்கள் பூர்த்தியான) பதிவு செய்தல்
- காலம் தாழ்த்தி இறப்பு (03 மாத காலம் கடந்த பின்னர்) பதிவு செய்தல்
- பிறப்புச் சான்றிதழில் பெயர் ஒன்றை சேர்த்தல் (21 வயதிற்கு குறைந்த, 21 வயதிற்கு மேற்பட்ட), பெயர் மாற்றம் செய்தல் (21 வயதிற்கு குறைந்த, 21 வயதிற்கு மேற்பட்ட)
- பிறப்புச் சான்றிதழில் உள்ள விபரங்களை மற்றுதல்/ சேர்த்தல்/ நீக்குதல் (தாய், தந்தையரின் விபரங்கள்)
- அலுவலகத்தில் திருமண பதிவு மேற்கொள்ளல்
தேசிய அடையாள அட்டை வழங்குதல்
- தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவம் (புதிய தேசிய அடையாள அட்டை - ஆ.ப.தி. 1, பிரதி ஒன்றை பெற்றுக்கொள்ளல் - ஆ.ப.தி. 7, திருத்தங்கள் - ஆ.ப.தி. 8)
- 50 வயதுக்கு குறைவான விண்ணப்பதாரர்கள் தமது பிறப்பு சான்றிதழ் அல்லது அனுமான வயது சான்றிதழின் அசல் மற்றும் நகல்
- 50 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்கு பிறப்பு சான்றிதழ் அல்லது அனுமான வயது சான்றிதழ் இல்லாவிடில் மாற்று ஆவணங்கள் (பாடசாலையிலிருந்து விலகும் போது வழங்கப்பட்ட சான்றிதல், ஞானஸ்நான சான்றிதழ் ,விண்ணப்பதாரரின் பிறந்த தேதியில் பிறந்த வேறொரு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பு, எஸ்டேட் விட்டு விலகும் போது வழங்கப்பட்ட சான்றிதழ், கடவுச்சீட்டின் தேவையான பக்கங்களின் பிரதி ,தோட்ட/ எஸ்டேட் கண்காணிப்பாளரால் வழங்கப்பட்ட பதிவு அட்டை, பிறப்புச் சான்றிதல்)
- வெளிநாட்டில் பிறந்திருந்தால் குடியுரிமை சான்றிதழ்
- வர்ண புகைப்படங்கள் 6 (13/8 "* 7/8")
- தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக முதல் முறையாக விண்ணப்பிப்பாராயின் விண்ணப்பதாரரின் தந்தை/ தாய்/ பாதுகாவலர் ஆகியோரின் தேசிய அடையாள அட்டையின் கிராம உத்தயோகத்தரால் சான்றிடப்பட்ட பிரதி
- கணவரின் பெரை பெற்றுக்கொள்வதற்காக திருமண சான்றிதழ்
- புத்த பிக்குகளின் பெயராயின் சாமனேர சான்றிதழ் அல்லது ஒரு உபசம்பா சான்றிதழ்
- புத்த மத குருமார்கள் துறவியிலிருந்த்து விலகும் சந்தர்ப்பத்தில் பௌதத் மத திணைக்களத்திலிருந்து பெற்றுக்கொண்ட துறவறத்தை களைந்ததற்கான சான்றிதழ்
- அடையாள அட்டையில் தான் வகிக்கும் பதவி குறிப்பிடப்பட வேண்டுமாயின் 3 மாதங்களுக்குள் சேவையில் பெறப்பட்ட சான்றிதழ்
- காணாமல் போன அடையாள அட்டை தொடர்பாக போலீஸ் புகாரின் அசல் நகல்
- திருத்தப்பட்ட அடையாள அட்டையாயின் தற்போது பயன்படுத்தப்படும் அடையாள அட்டை
- முத்திரைகள் - வயது 16 - 17 ரூ.3.00, வயது 17 க்குமேல் ரூ.13.00, திருத்தம் மற்றும் காணாமல் போன அடையாள அட்டை தொடர்பாக ரூ.15.00
- முறையான வாக்குமூலம் முத்திரையுடன் (தேவைப்பட்டால்)
பிறப்புச் சான்றிதழின் பெயர் இணைத்தல் மற்றும் மாற்றுதல்
7 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
- மாணவர் செயல்திறன் அட்டவணை
- செய்தித்தாள் விளம்பரம் - வங்கி புத்தகம்
- தேசிய/ அஞ்சல் அடையாள அட்டை – திருமண சான்றிதழ்
- அரசாங்க அல்லது பிற நிறுவனங்களில் இருந்து பெறப்படும் அறிக்கை
- வாக்களிக்கும் பதிவின் சான்றளிக்கப்பட்ட நகல்
மேற்குறிப்பிடப்பட்டவற்றில் குறைந்தது மூன்று ஆவணங்களாவது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலதிகமாக
- விண்ணப்ப படிவம்
- திருத்தப்பட வேண்டிய பிறப்புச் சான்றிதழின் அசல்
- இரு பெயர்களினாலும் குறிப்பிடப்படுபவர் ஒருவரே என பிரதேச செயலகத்தால் அத்தாட்ச்சிப்படுத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்
பின்குறிப்பு
- 21 வயதிற்கு குறைந்தவரின் பெயர் மாற்றம் செய்வதெனில், அந்த அறிக்கையை பெற்றோர்/ பாதுகாவலர் சமர்ப்பிக்க வேண்டும்.
- புதிய பெயரை குறைந்தது ஒரு வருடம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
7 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு
- திருத்தப்பட வேண்டிய அசல் பிறப்புச் சான்றிதழ்
- பெற்றோர் திருமண சான்றிதழ்
- தாய்/ தந்தையின் தேசிய அடையாள அட்டை
- தந்தை மற்றும் தாயின் ஆட்சேபனை இல்லை என்று வாக்குறுதி சான்றிதழ்
விண்ணப்ப படிவம் குழந்தையின் பெற்றோர்/ பாதுகாவலர் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பிறப்புச் சான்றிதழில் தந்தையின் விபரங்கள் காணப்படும் பகுதியில், பாட்டன் விபரங்கள் காணப்படும் பகுதியில் ஏற்பட்ட ஒரு தவறை சரிசெய்தல் மற்றும் பிறப்புச் சான்றிதழில் திருமணமானவர் என்பதை சேர்த்தல்/ திருத்துதல்
- திருத்தப்பட வேண்டிய அசல் பிறப்புச் சான்றிதழ்
- தந்தையின் அசல் பிறப்புச் சான்றிதழ்
- பெற்றோரின் அசல் திருமண சான்றிதழ்
- தாய்/ தந்தையின் தேசிய அடையாள அட்டையின் பிரதி
காலம் தாழ்த்தி பிறப்பு பதிவு
- பிறப்பு விளக்கம் (அசல் பிரதி)
- தடுப்பூசி அட்டை நகல் பிரதி
- பெற்றோர் திருமணமானவர்கள் எனில், திருமண சான்றிதழ்
- பெற்றோரின் அசல் பிறப்பு சான்றிதழ்கள்
- தாய் மற்றும் தந்தையின் தேசிய அடையாள அட்டையின் பிரதி
- பிறந்து 01 வருடத்திற்கு குறைவாயின் ரூ.50.00 முத்திரை
- பிறந்து 01 வருடத்திற்கு அதிகமெனில் ரூ.100.00 முத்திரை
மேலே உள்ள ஆவணங்களுடன் பொற்றார் குழந்தையுடன் மாவட்ட பதிவாளர் பிரிவுக்கு வருகை தருவது அவசியமாகும்.
காலம் கடந்த இறப்புக்களின் பதிவு
- மருத்துவமனையில் மரணித்திருந்தால், மருத்துவமனையின் அசல் மரணச் சான்றிதழ்.
- கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்
- கண்டனம்/ இறப்பு விளம்பரங்கள்
- மரணபெட்டிக்கான பண ரசீது
- மதசடங்கு நிகழ்த்திய மதகுருவின் கடிதம்
- மரணித்து 01 வருடத்திற்கு குறைவாயின் ரூ.50.00 முத்திரை
- மரணித்து 01 வருடத்திற்கு அதிகமெனில் ரூ.100.00 முத்திரை
- அறிவிப்பவரின் பிறப்புச் சான்றிதழ்/ திருமண சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதி
மேலே குறிப்பிட்ட ஆவணங்களுடன் திங்கள் அல்லது புதன் கிழமைகளில் மாவட்ட பதிவாளர் பிரிவிற்கு சமுகமளிக்கவும்.











