நிர்வாகப் பிரிவு
மரணித்த ஒருவரது வங்கிக்கணக்கு அல்லது அவரால் அடகு வைக்கப்பட்ட அடகு பொருட்கள் சம்பந்தமான நடவடிக்கைகளின் போது கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்
1. மரண சான்றிதழ்
2. விண்ணப்பதாரரின் உறவுமுறை (பிறப்புச்சான்றிதழ், திருமண சான்றிதழ்)
3. வேறு நபர்கள் காணப்படின் விண்ணப்பதாரருக்கு பணம் அல்லது அடகு பொருளை வழங்குவதில் ஆட்சேபணை இல்லை என்று உறுதிமொழிக் கடிதம்
4. தேசிய அடையாள அட்டை
சமூக சேவைகள் பிரிவு
கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் ரூ.45,000/- ஊட்டச்சத்து கொடுப்பனவை பெறுவது எவ்வாறு?
கர்ப்பமடைந்து 3 மாதத்திற்கு முன்னர் உங்களுக்குரிய பிரதேச செயலகத்தின் ஆரம்பகால குழந்தை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தரிடமிருந்து அல்லது இவ்வேலைத்திட்டத்திற்கு பொறுப்பன அதிகாரியிடமிருந்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
மேலதிக மாவட்ட பதிவாளர் பிரிவு
பிறப்பொன்றை பதிவு செய்வது எவ்வாறு?
1. சாதாரனமாக பிறப்பு பதிவை மேற்கொள்வதங்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்குள், குறித்த பிரதேசத்தின் பிறப்பு சான்றிதழ் பதிவுசெய்யும் பதிவாளரை சந்தித்து அதனை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
2. மூன்று மாதங்கள் கடந்த பின்னர் பிறப்புகளைப் பதிவு செய்வதற்கு மேலதிக மாவட்ட பதிவாளரை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஓய்வூதிய பிரிவு
சிவில் ஓய்வூதியதாரரின் மரணத்திற்கு பிறகு விதவை, அநாதைகள் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்வது எவ்வாறு?
1.முதலாவதாக, கிராம உத்தியோகத்தரிடமிருந்து ஓய்வூதியதாரரின் இறப்புக்கான அத்தாட்ச்சி பத்திரம் ஒன்றை பெற்று ஓய்வூதியத்தை நிறுத்துதல்.
2.அதிக பணம் இருந்தால், அதனைப் பெற வங்கிக்கு கடிதம் வழங்குதல்.
3. உரிய நபரிடம் பின்வரும் ஆவணங்களைக் கொண்டுவருமாறு தெரிவித்தல்,
- ஓய்வூதியதாரரின் இறப்பு சான்றிதழின் அசல் சான்றிதழ்
- விதவையின் பிறப்பு சான்றிதழின் அசல் சான்றிதழ்
- திருமண சான்றிதழின் அசல் சான்றிதழ்
- விதவையின் வங்கிக் கணக்கு புத்தகத்தின் பிரதி
- விதவையின் தேசிய அடையாள அட்டையின் பிரதி
- விதவை, அனாதை அட்டையின் பிரதி அல்லது விதவை, அனாதை அட்டை இலக்கம்
- கிராம உத்தியோகத்தரால் அத்தாட்ச்சி பண்ணப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான வர்ண புகைப்படம் ஒன்று
- மேலே கூறப்பட்ட அனைத்து ஆவணங்களினதும் பிரதிகள் கிராம உத்தியோகத்தரால் அத்தாட்ச்சி பண்ணப்பட்டிருத்தல் வேண்டும்
- Pd 04 விண்ணப்பம் பூர்த்திசெய்யப்பட்டு கிராம உத்தியோகத்தரால் அத்தாட்ச்சி பண்ணப்பட வேண்டும்
4. பின்னர், பொருத்தமான தகவல்களை பெற்று கோவை செய்து, விதவைகள், அனாதைகள் ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விதவையின் மரணத்திற்குப் பின் ஏன் வாரிசுகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை?
விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய சட்டத்திற்கு அமைய குறித்த நபரின் இறப்புக்குப் பிறகு அந்நபருக்குரிய சம்பளம் அல்லது பாக்கி கொடுப்பனவுகள் காணப்படின், அவற்றை அவர்களது வாரிசுகளுக்கு வழங்குவதற்கான சட்ட விதிகள் இல்லை என்பதை தெளிவுபடுத்தல்.











