எமது நோக்கு

நவீன தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், மக்களை மையமாகக் கொண்ட ஒரு சிறந்த சேவை.

எமது கொள்கை

தொழில்நுட்பம் மற்றும் வெளிப்படைத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கும், மனிதாபிமானம் மற்றும் ஊழலற்ற தன்மை கொண்ட திறமையான பொதுச் சேவையின் மூலம், ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதியான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்தல்.

அம்பன்பொல பிரதேச செயலகத்தின் வரலாறு

வடமேல் மாகாணத்தில் குருணாகல் மாவட்டத்தின் யாபஹுவ தேர்தல் பிரிவில் அம்பன்பொல பிரதேச செயலகம் நிறுவப்பட்டுள்ளது. வடக்கில் கல்கமுவ பிரதேச செயலாளர் பிரிவு, தெற்கே மஹவ பிரதேச செயலாளர் பிரிவு, கிழக்கே எஹெட்டுவெவ பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மேற்கில் கொட்டவெஹர பிரதேச செயலாளர் பிரிவு ஆகியவை அமைந்துள்ளன. இதன் நிலப்பரப்பானது 136.93 சதுர கிலோமீற்றர் ஆகும். இந்த பிரதேச செயலாளர் பிரிவானது கந்திஹ கோரலயின் 28 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடங்கியுள்ளது.

குருணாகலில் இருந்து அனுராதபுரம் செல்லும் ஏ தரத்தைச் சேர்ந்த பிரதான போக்குவரத்து பாதையும், அம்பன்பொல் இருந்து நிக்கவரட்டிய வரையான  வீதியும், அம்பன்பொலயிலிருந்து எஹெட்டுவெவ வரையான‌ வீதியும் அம்பன்பொல நகரத்தின் குறுக்காகச் செல்கிறதன‌. கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரையிலான புகையிரத பாதையும், அம்பன்பொல புகையிரத நிலையமும் இந்தப் பிரிவில் அமைந்துள்ளன. கெக்கட்டிய ஓடை அம்பன்பொல நகர் அருகிணூடாகச் சென்று இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தை அடைகின்றது. அபகொலவெவ மற்றும் மெடியாவயில் இரண்டு பெரிய நீர்த்தேக்கங்களும், பல சிறிய குளங்களும், அணைக்கட்டுகளும் இங்கு காணப்படுகின்றன. இங்கு உலர் வலயத்திற்கு உரித்தான பல்வேறு வகையான புதர் செடி வகைகள் பரவலாக‌ காணப்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு எல்லையிலிருந்து மீ ஓயா நீர் பாய்கிறது.
 
மஹவ பிரதேச செயலகத்தின் கீழ் காணப்பட்ட இப்பிரதேசம்​ ஒரு தனி பிரதேச செயலகமாக 1988 ஆம் ஆண்டு மஹவ பிரதேச சபை அலுவலகத்தின் அம்பன்பொல பிரதேச சபை உப அலுவலகத்தில் உப பிரதேச செயலகமாக ஆரம்பிக்கப்பட்டது. அனுராதபுரம், குருணாகல் பிரதான வீதியில்  நிர்மாணிக்கப்பட்ட‌ புதிய இரண்டு அடுக்கு மாடி கட்டடத்திற்கு 2000ம் ஆண்டு ஆகஸ்ட் 06ம் திகதி இடம்மாற்றப்பட்டது. கஷ்டப்பிரதேச பிரிவுகளில் ஒன்றான இப்பிரதேசத்தில் மக்கள் தொகை 27,316 ஆக காணப்படுவதுடன் 122 கிராமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
 
இந்த பிரதேச செயலகமானது அரை சமவெளி வலயத்திற்கு சொந்தமானது. மண்ணைப் பொறுத்தவரை, அதில் பயோட்டின் நைஸ் மற்றும் கிரினேட் ஆகிய வரண்டல் பறைகளை அதிகளவில் காணக்கூடியதாக உள்ளது. பிரதேசத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளும்போது  பண்டைய ரஜமஹா விகாரை மற்றும் பில்ல இடிபாடுகள் பிரசித்தமாகும்.  சந்துன்கிரி ரஜமஹா விகாரை, கணேப்புரான ரஜமஹா விகாரை மற்றும் கவரத்திஸ்ஸாராம விகாரை போன்றவை வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்களாகும்.
 
உலர் வலய காலநிலைக்குட்பட்ட இப்பிரதேசத்திற்கு மழைவீழ்ச்சியானது மொன்சூன் மற்றும் அயன மண்டல பருவ காற்று மழை மூலம் கிடைக்கின்றதது. வடகீழ் பருவகாற்று மழை மூலம் செப்டம்பர் முதல் பெப்ரவரி வரை அதிக மழைவீழ்ச்சி கிடைப்பதுடன் அயன மண்டல பருவ காற்று மழையானது மார்ச் ஏப்பிரல் மாதத்தில் கிடைக்கின்றது.
 
1997 இல் இருந்து பணியாற்றிய பிரதேச செயலாளர்கள்
 
பெயர்     முதல்  வரை
திரு         இ.எம்.டி.எம்.ஏக்கநாயக 1997 1998
திரு         ஆர்.எம்.பண்டார ராஜபக்ஷ (பதில் கடமை)                        1998 1999
திரு         ஏ.எச்.எஸ். விஜேசிங்ஹ                                                               1999 2001
திருமதி  யு.ஏ.சந்ரா குணரத்ன                                                                  2002 2012
திரு         டப்.எஸ்.சேனாதிஸ்ஸ                                                                2013 2016

செல்வி   எச்.எம்.சீ.ஜே. ஹேரத்     

செல்வி எச்.எம்.சீ.ஜே. ஹேரத்

                                                          

2017

2026

2026

தற்போது வரை

செய்தி மற்றும் நிகழ்வுகள்

25
ஜூன்2026
Samurdhi Bank Progress Review Meeting - 2026

Samurdhi Bank Progress Review Meeting - 2026

சமுர்த்தி வங்கி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் - 2026...

29
மே2026
Dhamma sermon program held in conjunction with Vesak week

Dhamma sermon program held in conjunction with Vesak week

தம்ம சொற்பொழிவு நிகழ்ச்சி நிரல் 2026 தம்ம சொற்பொழிவு...

குடியுரிமை சாசனம்

Scroll To Top