மக்களுக்கான இலவச கொடுப்பனவுகள்
- குறைந்த வருமானம் பெறும் மக்கள், நோயாளிகள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது
- விண்ணப்ப் படிவத்தை பூர்த்தி செய்து கிராம உத்தியோகத்தரின் சிபாரிசுடன் இந்தப் பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவுக்கு வழங்க வேண்டும்
- 60 வயதிற்கு குறைந்த ஒருவர் நோயாளி என்ற அடிப்படையில் விண்ணப்பிக்கும் போது மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்
மாணவர்களுக்கான இலவச கொடுப்பனவுகள்
- தந்தையை இழந்த குடும்பங்களைச் சேர்ந்த கல்வி பயிலும் ஏழைக்குழந்தைகளுக்கு இந்தப் புலமைப்பரிசில் வழங்கப் படுகிறது
- கல்வி கற்கும் பாடசாலையின் அதிபரின் கையொப்பத்துடனான ஒரு கடிதம்
- பிறப்புச் சான்றிதழின் நகல்
- தந்தை இறந்துவிட்டால் அல்லது விட்டுச்சென்று இருந்தால் அதற்கான இறப்புச் சான்றிதழ் அல்லது அது பற்றிய வாக்குமூலம்
அங்கனவீனர் வீட்டு உதவி
- பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்தல்
- விண்ணப்பதாரர் தனக்கன சொந்த நிலத்தைக் கொண்டிருத்தல் (அது காணியின் உரிமைப்பத்திரத்தை கொண்டு உறுதி செய்யப்பட வேண்டும்)
- நிலம் இல்லாவிட்டால், நிலம் வழங்குபவருடனான ஒப்பந்தம் (இது பிரதேச செயலாளரால் அல்லது சமூக சேவை உத்தியோகத்தரால் செய்யப்படும்)
- குறைந்த வருமானம் பற்றிய கிராம உத்தியோகத்தரின் கடிதம்
- அங்கவீனம் தொடர்பாக மருத்துவச் சான்றிதழ்
- தொழில்நுட்ப அதிகாரிகளினால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டம் மற்றும் மதிப்பீடு
- வயதை உறுதிப்படுத்திகொள்ள பிறப்புச் சான்றிதழ் அல்லது அடையாள அட்டையின் அட்டையின் பிரதி
- ரூ. 250,000.00 க்கு மேலான மதிப்பீடுகளின்போது மீதிப்பணத்தை திரட்டும் முறை பற்றிய ஆவணங்கள்
அங்கவீனர்களுக்கான சுயதொழில் உதவி
- பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்தல்
- அங்கவீனம் தொடர்பாக மருத்துவச் சான்றிதழ்.
- சமூக சேவை உத்தியோகத்தரின் அறிக்கை.
- சுய வேலைவாய்ப்புக்காக் கோரப்படும் பொருட்களின் விவரங்கள் .
- விண்ணப் ப் படிவத்தில் சுயதொழில் திட்டம் தொடர்பான அறிக்கை.
- கிராமிய உத்தயோகத்தரிடமிருந்து குறைந்த வருமானம் பற்றிய சான்றிதழ்
ஒற்றை தாய் தந்தைகளுக்கான சுய வேலைவாய்ப்பு உதவி
- இந்த உதவி 50 வயதிற்கு குறைவான கணவன் இறந்த அல்லது கணவனால் கைவிடபட்ட பெண்களுக்கு வழங்கப்படுகிறது
- கிராமிய உத்தயோகத்தரிடமிருந்து குறைந்த வருமானம் பற்றிய சான்றிதழ்
- இறப்புச் சான்றிதழ் அல்லது கைவிடப்பட்மைக்கான வாக்குமூலம்
- பாடசாலை செல்லும் வயதுடைய குழந்தைகள் காணப்படின் முன்னுரிமை வழங்கப்படும்











