புதிய சிவில் ஓய்வூதியங்களைத் தயாரித்தல்
இறுதியாக பணியாற்றிய நிறுவனத்திலிருந்து ஓய்வூதிய ஆவணங்கள் அடங்கிய கோவையை பெற்றுக்கொண்ட பிறகு, ஓய்வு பெற்றவர் ஓய்வூதியத்தை சரிசெய்துகொள்வதற்கு பின்வரும் ஆவணங்ளை சமர்ப்பிக்க வேண்டும்.
- ஓய்வூதிய அடையாள அட்டை
- சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெறப்பட்ட வதிவிட சான்றிதழ்
- வங்கி புத்தகத்தின் முதல் பக்கத்தின் ஒரு பிரதி
- ஓய்வு அறிவிப்பு
விதவைகள் ஓய்வூதியம் தயாரித்தல்
ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கு ஓய்வூதியம் பெறுபவர் இறந்ததும் அது தொடர்பாக எங்கள் அலுவலகத்திற்கு அறியத்தருவதுடன் விதவைகள் ஓய்வூதியத்தை தயாரிப்பதற்காக பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- திருமண சான்றிதழ்
- பெயரில் மாற்றங்கள் காணப்படின் அது தொடர்பாக உறுதியறிக்கை
- மரண சான்றிதழ்
- ஓய்வூதியம் பெறும் சம்பளத் தாளின் பிரதி
- 21 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்
- 3 ¼, 2 ¼ அளவு புகைப்படங்கள் மூன்று கிராம உத்தியோகத்தரால் அத்தாட்ச்சி செய்யப்பட்டு வைத்திருத்தல் வேண்டும்
- தேசிய அடையாள அட்டை
- PD 06 படிவத்தை கிராம உத்தியோகத்தரிடம் சமர்ப்பிக்கவும்
- விதவை/அநாதைகள் அங்கத்துவ இலக்கம்
- விதவை/ விதவை ஆண் ஆகியோறது பிறப்புச் சான்றிதழ்
- ஓய்வூதிய நிதி படிவம் 15 மற்றும் கிராம உத்தியோகத்தரிடம் இருந்து பெறப்படும் ஏனைய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
அநாதைகள் கொடுப்பனவு
இறப்புச் சான்றிதழ் கோவை எங்கள் அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றதும் ஓய்வூதிய திணைக்களத்தில் விதவைகள் அநாதைகள் பிரிவிலிருந்து விதவைகள் அநாதைகள் ஓய்வூதியக் கோவை எங்கள் பிரதேச செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளமையை குறிப்பிட்டு ஒரு கடிதம் எங்கள் அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றதும் குறிப்பிட்ட அநாதை பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- குழந்தை பிறப்புச் சான்றிதழ்
- தாய் மற்றும் தந்தையின் மரண சான்றிதழ்கள்
- தாய் மற்றும் தந்தை திருமண சான்றிதழ்
- 18 வயதுக்கு குறைவானவர்கள் தமது பாதுகாவலருடனும், 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5/1,6,7,8 ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்
அங்கவீனர் கொடுப்பனவு
பெற்றுக்கொணடிருந்த ஓய்வூதியம் அல்லது விதவையின் ஓய்வூதியம் நிறுத்தவதற்கு ஓய்வூதியம் பெறுபவர் இறந்ததும் எங்கள் நிறுத்தவதற்கு தெரிவிக்கப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து பின்வரும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- நிரந்தரமாக ஊனமுற்ற நபர்களுக்கான ஊனமுற்றோர் ஓய்வூதிய விண்ணப்பம் (ஊன 01) மற்றும்
- பாதுகாவலர்கள் ஊனமுற்ற சிறுவன்/ சிறுமி சம்பந்தமாக வழங்கும் உறுதியறிக்கை (ஊன 02)
ஊனமுற்றோர் ஓய்வூதியம் தொடர்பான அடிப்படை சோதனைகளுக்காக எம்மால் வழங்கப்படும் நாள் மற்றும் நேரத்தின் போது எங்களது அலுவலகத்திற்கு சமூகமளிக்க வேண்டும். பாதுகாவலர் அவசியப்படின் ஆரம்ப பரிசோதனைக்கு சமூகமளிக்க வேண்டும்.
வாரிசு கொடுப்பனவு
- ஓய்வூதியம் அல்லது விதவையின் ஓய்வூதியத்தை நிறுத்த எங்கள் பிரதேச செயலகத்திற்கு அது பற்றி அறியத்தரல்
- அசல் மரண சான்றிதழ்
- இத்தொகையை ஒருவருக்கு வழங்குவதில் ஏனைய வாரிசுகளுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவிக்கும் சமாதான நீதியரசரால் கையொப்பமிடப்பட்ட ஒரு கடிதம் (திருமணமான / திருமணமாகாத அனைவரிடமிருந்தும்)
- குடும்ப வாரிசுகளின் பெயர், மரணித்தவருக்கு உள்ள உறவு முறை, வயது, பாலினம்,தொடர்பான விபரம் அடங்கிய கிராம சேவகர் அறிக்கை (அதை பிரதேச செயலார்/ உதவி அரசாங்க அதிபர் உறுதிப்படுத்த வேண்டும்)
- படிவம் 77
- இந்தப் பணத்தை காசோலை மூலம் செலுத்த வேண்டியதால் வங்கி கணக்கு இலக்கம் மற்றும் வங்கியின் பெயரை குறிப்பிடவும்
- சிவில் (படிவம் இலக்கம் 128)
- விதவைகள் (படிவம் இலக்கம் 129)
- அங்கவீனர் (படிவம் இலக்கம் 130)











