உலர் உணவு விநியோகம்
பிரதேச செயலாளரது வழிகாட்டளுக்கமைய குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான உலர் உணவு விநியோகம் 193 ரொலவ கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது. ரொலவ விகாரையின் தலைமை பிக்கு மற்றும் அம்பன்பொல பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதேச செயலாளரது வழிகாட்டளுக்கமைய குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான உலர் உணவு விநியோகம் 182 காசிகொடே கிழக்கு கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது. இதனை அப்பிரதேச பொதுநலன் விரும்பிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அம்பன்பொல பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி மற்றும் பொதுநலன் விரும்பிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சமுர்த்தி மானியம் வழங்கல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

குருணாகல் மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி பிரிவின் தலைமை அதிகாரி மானியம் வழங்கல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. அதன்போது சமுர்த்தி அதிகாரிகளுக்கு சமுர்த்தி நிவாரனம் பெறுவோருக்கான மானியங்களை வழங்கும் முறை தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் 190 அம்பன்பொல தெற்கு கிராம சேவகர் பகுதியில் வசிக்கும் சமுர்த்தி நிவாரனம் பெறுவோருக்கான மானியங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு திட்டம் தொடர்பான ஒன்றுகூடல்
கொரோனா தடுப்பு திட்டம் தொடர்பான ஒன்றுகூடல் 31.03.2020 ஆம் திகதி அம்பன்பொல பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அதில் பிரதேச செயலாளர், ஏஎஸ்பி அதிகாரி, உதவி பணிப்பாளர், மாவட்ட மருத்துவ அதிகாரி, பொது பரிசோதகர், கொவிஜன சேவை அதிகாரி, பிரதேச சபை அதிகாரி மற்றும் அனர்த்த நிவாரன சேவை அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.கொரோனா தடுப்பு திட்டம் தொடர்பான ஒன்றுகூடல் 31.03.2020 ஆம் திகதி அம்பன்பொல பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அதில் பிரதேச செயலாளர், ஏஎஸ்பி அதிகாரி, உதவி பணிப்பாளர், மாவட்ட மருத்துவ அதிகாரி, பொது பரிசோதகர், கொவிஜன சேவை அதிகாரி, பிரதேச சபை அதிகாரி மற்றும் அனர்த்த நிவாரன சேவை அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.











