2023 ஆண்டு கடமைகளை செய்தல்
2023 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அம்பன்பொல பிரதேச செயலாளர் உட்பட காரியாலய உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன. பிரதேச செயலாளரின் தலைமையில் தேசிய கொடியை ஏற்றிவைக்கப்பட்டு அரச சேவை உறுதிமொழியை மொழிந்து வளமான இலங்கையில் சிறந்த குடிமகன், மகிழ்ச்சியான குடும்பம், நல்லொழுக்கமுள்ள மற்றும் சிறந்த பண்பாடுகள் கொண்ட நியாயமான சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்ப அனைத்து உத்தியோகத்தர்களும் நேர்மையான, திறமையான மற்றும் மரியாதைக்குரிய பங்களிப்பை வழங்குவதன் அவசியத்தை விளக்கும் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைவரும் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர்.






