மரம் வெட்டுதலுக்கான அனுமதிப்பத்திரம் (பலா மரம்/ ஈரப் பலா/ பெண் பனை மரம்)
- கிராம சேவகர் மூலம் காணி பத்திரத்தின் அசலுடன் ஒப்பிட்டு பார்த்து சான்றிடப்பட்ட காணி பத்திரத்தின் பிரதி
- விண்ணப்பதாரருக்கு காணி உரிமை தெளிவாக இல்லாத பட்சத்தில், கிராம சேவகர் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட காணி உரிமையாளரின் விருப்ப கடிதம்
- காணி உரிமையாளர்கள் பலர் காணப்படின் விண்ணப்பதாரருக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நிரூபிக்கும் உறுதியறிக்கை
- ஒரு புதிய கட்டுமானத்துக்காக மரங்களை அகற்றுவதாயின் குறித்த கட்டடத்தின் கட்டுமானத் திட்டம்
- அபாயங்கள் காரணமாக மரத்தை அகற்றுவதாயின் பிரதேச சபை/ நகர சபையினால் மரத்தை அகற்றுவதற்கு வழங்கப்பட்ட கடிதம்
- காணி சம்பந்தமான நீதிமன்ற தீர்ப்புகள் சம்பந்தப்பட்டிருந்தால் அதனுடன் சேர்த்து மரம் அகற்ற வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள்
- மின்சாரக் கம்பங்கள் தொடர்பான இடைஞ்சல்கள் அல்லது எதிர்ப்பு தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் அது பற்றி அறிவித்தமை தொடர்பான கடிதம்
- வேலி எல்லையில் மரம் அமைந்திருந்தால் பக்கத்து காணி (எல்லை) உரிமையாளர் குறிப்பிட்ட மரத்தை அகற்ற ஆட்சேபனை இல்லை என கிராம சேவகர் முன் அளித்த அறிக்கை.
அனுமதிப் பத்திர கட்டணம் - ரூ.168.00
மரம்/ மர தளபாடங்கள் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குதல்
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
- மரக்குற்றிகள், கிழிக்கப்பட்ட பலகைகள், மர தளபாடங்கள் தொடர்பாக கிராம உத்தியோகத்தர் அறிக்கை
- பலா/ ஈரப் பலா/ பெண் பனை மரம் வெட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரம்
- கிராம சேவகரால் வழங்கப்பட்ட மரத்தை குற்றிகளாக்குவதற்கான அனுமதி பத்திரம்
- வனதள பரிந்துரை
- ரயில் மூலம் மரம் அல்லது தளபாடம் போக்குவரத்து செய்யும் போது போக்குவரத்திக்கான அசல் அனுமதி மற்றும் ரயில் துறை வழங்கும் அதிகாரப்பூர்வ ரசீது (வனதள பரிந்துரை, கிராம சேவகர் பரிந்துரைத தேவைப்படாத அதேவேளை உரிம கட்டணம் அறவிடப்படமாட்டாது)
- மரக்குற்றிகள், கிழிக்கப்பட்ட பலகைகள், மர தளபாடங்கள் விலைக்கு வாங்கிய ரசீது
புதிய அடகுக்கடை திறக்க அனுமதிப் பத்திரம் வழங்குதல்
கிராம உத்தியோகத்தர் அறிக்கை- பொலிஸ் அதிகாரி அறிக்கை
- நிறுவனங்களை உட்சேர்த்துக்கொள்தல் பதிவு சான்றிதழின் அசல் மற்றும் பிரதி
- சட்ட விரோத செயலகளில் ஈடுபட்டதில்லை என்ற வாக்குமூலம்
- தீ மற்றும் கொள்ளையிலிருந்து பாதுகாக்கும் காப்புறுதி சான்றிதழ் அசல் மற்றும் பிரதி
- கூட்டு வியாபாரம் எனின் கூட்டு ஒப்பந்தம்
- வரி பத்திரத்தின் நகல்
அனுமதிப் பத்திர கட்டணம் - ரூ.1,000.00
பிணை - ரூ.100,000.00
பதிவு கட்டணம் - ரூ.25,000.00
மதுபான விற்பனை அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்தல்
- உதவி சுங்கவரி ஆணையாளர் வழங்கிய சான்றிதழ்
- உள்நாட்டு வருவாய் ஆணையாளர் மற்றும் மாகாண வருவாய் ஆணையாளர் ஆகியோரால் சுங்கவரி செலுத்தியமை தொடர்பாக வெளியிடப்பட்ட சான்றிதழ் மற்றும் அதன் பிரதியொன்று
- கடந்த ஆண்டு அனுமதிப்பத்திரம்
(மதுபான கடை சம்பந்தமான கெஸட் அறிவித்தலுக்கமைய கட்டணங்கள் அறவிடப்படும்)











