2017 ஆம் ஆண்டிற்கான‌ சமுர்த்தி பயனாளர்களை ஊக்குவிக்கும் திட்டம்

அம்பன்பொல பிரதேச செயலகத்தில் சமுர்த்தி வங்கியியல் சங்கங்கள் 02 காணப்படுகின்றன‌. இங்கு சமுர்த்தி நன்மைகள் பெறும் 2609 குடும்பங்கள் உள்ளன. இதில் 261 பயனாளிகள் ஊக்குவிக்கப்பட உள்ளனர்.

இதன்படி, அம்பன்பொல பிரதேச செயலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மூலதன ஒதுக்கீட்டுத் தொகை ரூ.895,588.00 ஆகும். இதனூடாக 05 வேளாண்மை திட்டங்கள், 01 மீன்வளத் திட்டம், 06 கால்நடை வளர்ப்பு திட்டங்கள் மற்றும் 16 தொழில்துறை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

இங்கு காணப்படுகின்ற சமூக சூழல் மற்றும் பொருளாதார சூழலின் படி, தொழில்துறை அபிவிருத்தி மற்றும் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி ஆகிய திட்டங்களின் அடிப்படையில் பின்வரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

சமுர்த்தி பயனாளிகளது குடும்பமொன்றிற்கு மொபைல் தள்ளுவண்டி ஒன்று வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி, சில்லறை வர்த்தகம், மொபைல் வர்த்தகம் மற்றும் காளான் வளர்ப்பு ஆகியவற்றிற்கு 03 வீட்டுக் களஞ்சியங்கள் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. சந்தைப்படுத்தல் திட்டத்தின் கீழ் 13 பயனாளர்களுக்கு 181,000.00 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பெண் தொழில் முனைவோர்களது கண்டுபிடிப்பு மற்றும் மதிப்பு சேர்க்கப்பட்ட தயாரிப்புகளில் ஈடுபடுவோருக்கான தொழில் பயிலுனர் நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. மேலும் சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பல்வேறு சமூக திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. திரிய‌ பியச வீடமைப்பு திட்டத்தின் கீழ் 02 வீடுகள் நிர்மாணிப்பதற்கு ரூபா 300,000.00 கிடைக்கப்பெற்றுள்ளது. மற்றும் ஹரித தயாத நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 63 கர்ப்பிணி தாய்மார்கள் செடி வகைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் நிகழ்வுகள்

25
ஜூன்2026
Samurdhi Bank Progress Review Meeting - 2026

Samurdhi Bank Progress Review Meeting - 2026

சமுர்த்தி வங்கி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் - 2026...

29
மே2026
Dhamma sermon program held in conjunction with Vesak week

Dhamma sermon program held in conjunction with Vesak week

தம்ம சொற்பொழிவு நிகழ்ச்சி நிரல் 2026 தம்ம சொற்பொழிவு...

குடியுரிமை சாசனம்

Scroll To Top